முதலமைச்சர் விஜய் 
தமிழ் நாடு

பயிர்க்கடன் தள்ளுபடி- விஜய்யின் புதிய அறிவிப்பு!

Staff Writer

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனில் ரூ. 75,000 வரையிலான கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

இன்றைய தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில், 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாக இந்த பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து தெரிவித்தார்.

இதுகுறித்து முதலமைச்சர் விஜய் கூறியதாவது:

"த.வெ.க. அரசு அமைந்தவுடன் குறு, சிறு விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், விவசாய அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று தற்பொழுது கூட்டுறவு வங்கிகளில் ரூ. 75,000 வரை பெற்ற பயிர்க்கடன் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

மேலும் ரூ. 75,000 முதல் ரூ. 1 லட்சம் வரையிலான பயிர்க்கடன்களுக்கு ரூ. 75,000 வரையிலும், ரூ. 1 லட்சத்திற்கும் மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000 வரையிலும் தள்ளுபடி வழங்கப்படும்.

அரசின் கடுமையான நிதிநெருக்கடிக்கு இடையிலும் ரூ. 953.06 கோடி கூடுதல் நிதிச்சுமையுடன் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் 2 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயனடைவர்." என்று முதலமைச்சர் விஜய் கூறினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram