மேட்டூர் அணையில் தண்ணீரைத் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் 
தமிழ் நாடு

மேட்டூர் அணையில் தண்ணீரைத் திறந்துவிட்டார் முதல்வர் விஜய்!

Staff Writer

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று முதலமைச்சர் விஜய் தண்ணீரைத் திறந்துவிட்டார்.

சென்னையிலிருந்து விமானத்தின் மூலமாக சேலத்தை அடைந்த முதலமைச்சர் விஜய்யை, அதிகாரிகள், கட்சியினர் வரவேற்றனர்.

பின்னர், அங்கிருந்து சாலைவழியாக மேட்டூர் அணைப் பகுதிக்கு காரில் புறப்பட்டார். அப்போது, மேச்சேரியிலிருந்து திறந்த வேனில் முதலமைச்சர் விஜய் சாலைவலம் சென்றார். சாலையின் இருபுறமும் நின்றிருந்த மக்களுக்கு கையசைத்தபடி முதலமைச்சர் விஜய் சாலைவலம் சென்றார்.

காவிரி டெல்டா பாசனத்திற்காக வழக்கமாக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால், நடப்பு ஆண்டில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் தாமதமாகத் திறக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் பாசனம் மூலமாக சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், அரியலூர் உட்பட்ட மாவட்டங்களில் உள்ள 16.05 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

நடப்பாண்டில் செப்டம்பர் 1 முதல் 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

ஆனால், விவசாயிகளோ 150 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்திவருகின்றனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram