தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களில் 75 ஆயிரம் ரூபாய்வரை வாங்கியுள்ள பயிர்க்கடன் முழுவதுமாக ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் விஜய் இன்று அறிவித்துள்ளார்.
அதற்கு மேல் கடன் வாங்கியவர்களின் கடனில் 35 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மொத்தம் 6, 22, 313 விவசாயிகள் முழுமையாக கடன் தள்ளுபடியைப் பெற்றுள்ளனர்.
மேலும், 8, 21, 191 விவசாயிகள் பகுதி அளவு தள்ளுபடியைப் பெறுவார்கள் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக, வெளியிடப்பட்ட தள்ளுபடி அறிவிப்பைக் கண்டித்து பல மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், முழுமையாக கடனைத் தள்ளுபடி செய்யவேண்டும் என விவசாயிகள் சங்கத் தரப்பில் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.