முதல்வர் விஜய் மரியாதை 
தமிழ் நாடு

காவலர் வீரவணக்க நாளில் முதல்வர் விஜய் மரியாதை!

Staff Writer

காவலர் வீரவணக்க நாளில் சென்னை டி.ஜி.பி. வளாகத்தில் முதலமைச்சர் விஜய் மரியாதை செலுத்தினார்.

முன்னதாக காவலர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர், டி.ஜி.பி. வளாகத்தில் மரக்கன்று ஒன்றை முதலமைச்சர் விஜய் நட்டார்.

மேலும், ரூ. 5 கோடியே 95 லட்சத்தில் காவலர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

காவலர் வீரவணக்க நாள்

"கடந்த 1959-ஆம் ஆண்டு லடாக் எல்லைப் பகுதியில் தாய்நாட்டைக் காப்பதற்காக வீரமரணமடைந்த 10 மத்திய ரிசர்வ் காவல் படைக் காவலர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தியாகத்தைப் போற்றும் காவலர் வீரவணக்க நாளில், நாட்டில் அமைதியையும், சட்டம்-ஒழுங்கையும் நிலைநாட்டும் உயரிய கடமையில் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்த காவல் துறையினர் அனைவருக்கும் வீர வணக்கங்கள்!" என்று முதலமைச்சர் விஜய் தனது சமூக ஊடகப் பக்கத்தில், கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram