தமிழ் நாடு

வந்தே மாதரம்... முதல் 3 ஆணைகள்... முதல்வர் விஜய் பதவியேற்பில்!

Staff Writer

இதுவரை இல்லாதபடியாக வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்ட பின்னர், முதலமைச்சர் விஜய்யின் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

த.வெ.க. தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இன்று காலை 10 மணிக்கு சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்றுக்கொண்டார்.

ஆளுநர் அர்லேகர் அவருக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணமும் இரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.

காங்கிரசின் மக்களவைத் தலைவர் இராகுல் காந்தி இதற்காகவே புதுதில்லியிலிருந்து வந்து கலந்துகொண்டார்.

விஜய்யின் பெற்றோர் சந்திசேகர், ஷோபா, நடிகை திரிஷா உட்பட முக்கிய விருந்தினர்கள் இதில் கலந்துகொண்டனர்.

முதலமைச்சர், அமைச்சர்கள் பலரும் ஆண்டவன் மீது ஆணையாக எனக் கூறி பதவியை ஏற்றுக்கொண்டனர்.