சென்னை, சைதாபேட்டையில் உள்ள சமூக நீதி விடுதியில் முதலமைச்சர் விஜய் இன்று மாலையில் மழையின்போது திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்கள் அவரிடம் புகார்களை அடுக்கினர்.
உணவில் புழு பூச்சிகள் இருப்பதாகவும் தண்ணீர் சரியாக வருவதில்லை என்றும் ஊழியர்கள் மாணவர்களை இழிவுபடுத்துவதாகவும் மாணவர் ஒருவர் கூறினார்.
மற்ற சிலரும் உணவுத் தரம் மோசமாக இருப்பதாகத் தெரிவித்தனர்.
ஏழை மாணவர்கள் காலையில் படித்துவிட்டு மாலையில் பகுதிநேர வேலை செய்துவிட்டுத் திரும்பினால் கதவை மூடிவிடுகிறார்கள்; இதனால் கொசுக்கடியில் படுக்கவேண்டியுள்ளது என்றும் அவர்கள் முறையிட்டனர்.
சமூகநீதித் துறை அமைச்சர் வன்னியரசும் உடனிருந்தார்.