கரூர் நெரிசல்- விஜய் 
தமிழ் நாடு

கரூர் செல்லும் விஜய்- 32 பேருக்கு அரசு வேலை தருகிறார்!

Staff Writer

கரூரில் விஜய் பிரச்சாரக் கூட்டம் நடத்தியபோது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அதில் தொடர்புடைய குடும்பங்களில் 32 பேருக்கு நாளை அரசு வேலைக்கான ஆணைகளை வழங்குகிறார். இதையொட்டி அவர் நேரடியாக கரூருக்கே செல்கிறார். 

காலை 9 மணியளவில் விமானம் மூலம் திருச்சிக்குப் புறப்படும் முதலமைச்சர் விஜய், அங்கிருந்து சாலை வழியாக கரூருக்குச் செல்கிறார்.

கரூர்- சேலம் புறவழிச் சாலையில் உள்ள அட்லஸ் கலையரங்க மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். பின்னர் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.

விஜய்யின் பயணத்தை முன்னிட்டு 6,500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.