முதல்வர் விஜய், நேற்று கத்திப்பாரா பகுதியில் 101 அடி உயரத்தில் நின்று டிரோன் மூலம் படம் எடுத்த இடம் வான்வெளிக் கட்டுப்பாட்டிற்குள் உள்ள இடம் என்று அ.தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது.
இந்திய விமான நிலையம், பொதுவாக இந்தியப் பகுதிக்குள் இருக்கும் வான்வெளி மண்டலங்களை பச்சை, மஞ்சள், சிவப்பு மண்டலங்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கின்றனர்.
பச்சை மண்டலங்களில் டிரோன் பறக்க யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை. மஞ்சள் மண்டலங்களில் டிரோன் பறக்க வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரியிடமிருந்து அனுமதி பெறவேண்டும்.
மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியான சிவப்பு மண்டலத்தில் டிரோன் பறக்க அனுமதி எதுவும் இல்லை. மத்திய அரசின் அனுமதியுடன் மட்டுமே, அந்த இடங்களில் இதுபோன்று செயல்களில் ஈடுபட வேண்டும்.
இதை முதல்வர் விஜய் மீறியுள்ளதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.