முதல்வர் விஜய் 
தமிழ் நாடு

சென்னை விமான நிலைய ஆபரேட்டரை மாற்றக் கோரி மோடிக்கு விஜய் கடிதம்!

Staff Writer

சென்னை விமான நிலையத்தைத் தற்போது நிர்வகிக்கும் இந்திய விமான நிலைய ஆணையம் அல்லாத வேறொரு நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறு முதல்வர் விஜய் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தின் தற்போதைய செயல்பாட்டில் தமிழக அரசு, அதிருப்தி அடைந்துள்ளதால், விமான நிலைய நிர்வாகத்தில் மாற்றம் தேவை என்று முதல்வர் விஜய் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் விஜய் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:

"தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில், தொடர்ந்து தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது. தொழில் முதலீட்டு வளர்ச்சிக்கு சர்வதேச விமான நிலையங்களின் உள் கட்டமைப்பும், நிர்வாகமும் முக்கியம்.

பயணிகளின் எண்ணிக்கை, விமானங்களின் இயக்கம், சரக்கு கையாளும் திறன் ஆகியவற்றில் சென்னை விமான நிலையம் மேம்பட வேண்டும்.

எனவே, தமிழகத்திற்கு சிறப்பான விமான நிலையம் அவசியம் என்பதால், தற்போதைய ஆபரேட்டர் நிர்வாகமான இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தை மாற்றிவிட்டு, வேறு ஆபரேட்டர் நிர்வாகத்தைக் கொண்டுவர வேண்டும்." என்று விஜய் தன் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram