கோவை புத்தகத் திருவிழா  
தமிழ் நாடு

ஜூலை17 முதல் கோவை புத்தகத் திருவிழா- 61இல் அந்திமழை!

Staff Writer

கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா அரங்கில் ஆண்டுதோறும் மிகப் பிரமாண்டமான புத்தகக்காட்சி நடத்தப்படும். நடப்பு ஆண்டிற்கான புத்தகக்காட்சி ஜூலை 17 முதல் ஜூலை 26 வரை நடைபெற உள்ளது.

காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.

300-க்கும் மேற்பட்ட அரங்குகளில்,170-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள் தங்களின் நூல்களைக் காட்சிப்படுத்தவுள்ளனர்.

இந்த விழாவில், புதிய புத்தக வெளியீடுகள், இலக்கியக் கூடல்கள், இளம் படைப்பாளிகளுக்கான சிறப்பு விருதுகள் இடம்பெறுகின்றன.

கடந்த 2024, 2025ஆம் ஆண்டு வெளிவந்த கவிதைத் தொகுப்பு, புதினம், சிறுகதை உட்பட்ட பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படைப்புகளுக்கு ரூ.25,000 பரிசுத்தொகை, சிறப்புச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகத்திருவிழாவில் நம் அந்திமழையும் இடம்பெற்றுள்ளது.

அரங்கில் கடை எண். 61இல் நம் அந்திமழையின் படைப்புகள் காட்சி, விற்பனைக்கு வைக்கப்படும்.

அந்திமழை வாசகர்கள் தவறாமல் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram