காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்ரவர்த்தி மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் சி.வி. சண்முகம் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவர் பதவிவிலகினார். அந்த காலியிடத்துக்கும் சேர்த்து வரும் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரவீன் சக்ரவர்த்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டார்.
முன்னதாக, த.வெ.க.வுக்கு இதில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்தும் காங்கிரசுக்கு அக்கட்சி வாய்ப்பை விட்டுக்கொடுத்தது.
மனுத்தாக்கலில் முதலமைச்சர் விஜய்யும் உடனிருந்தார்.
அவரைத் தவிர்த்து மற்றவர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில், பிரவீன் சக்ரவர்த்தி வெற்றிபெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரியான சட்டப்பேரவையின் கூடுதல் செயலாளர் அறிவித்துள்ளார்.