அன்பில் மகேஸ்  
தமிழ் நாடு

அன்பில் மகேசுக்கு இப்போதைக்கு ஜாமின் இல்லை!

Staff Writer

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தாக்கல்செய்த ஜாமின் மனுவை சென்னை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

கடந்த மாதம் 26ஆம் தேதி கைதுசெய்யப்பட்ட அன்பில் மகேஸ் மீது முந்தைய ஆட்சியில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க இலஞ்சம் பெற்றதாக வழக்கு பதியப்பட்டது. இதில் அவருடன் சேர்ந்து குற்றச்செயல் புரிந்ததாக சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் முத்துக்குமார், தனியார் பள்ளி சங்கத் தலைவர் அரசகுமார் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

இதில் கடந்த வாரம் போலீஸ் காவலிலும் மகேசிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் தன்னை ஜாமினில் விடுவிக்கக் கோரி அவர் ஊழல் வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். ஆனால் அவரது மனுவை நீதிபதி சத்தியமூர்த்தி இன்று தள்ளுபடி செய்தார்.