தாராபுரத்தில் பிடிபட்ட கோவை த.வெ.க.வினர் 
தமிழ் நாடு

தாராபுரத்தில் சுற்றித்திரிந்த கோவை த.வெ.க.வினரால் தகராறு!

Staff Writer

தமிழகம், மேற்குவங்கம் உட்பட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் அசாமில் மக்களவைத் தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெற்றுவருகிறது. 

இதில்,தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றுவருகிறது. 

ஆனாலும், தாராபுரம் தொகுதியில் வீராச்சிமங்கலத்தில் த.வெ.க. நிர்வாகிகள் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றிச்சுற்றி வந்தனர். 

விசாரித்ததில் அவர்கள் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. 

இதனால் கோபமான அ.தி.மு.க.வினர் அவர்களின் வாகனத்தை முற்றுகையிட்டு அவர்களைச் சிறைப்பிடித்ததைப் போல மடக்கி பிரச்னையில் ஈடுபட்டனர். 

ஆளும் கட்சியான த.வெ.க.வைச் சேர்ந்தவர்கள் எனும் நிலையில், வெளி மாவட்டத்தவர்கள் தொகுதிக்குள் நுழையக்கூடாது என்பதை மீறி வலம் வந்திருப்பது கடுமையான எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.