மு. வீரபாண்டியன், சிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர் 
தமிழ் நாடு

தி.மு.க. அணியிலிருந்து சிபிஐ கட்சியும் விலகியது!

Staff Writer

தி.மு.க. கூட்டணியிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் விலகியுள்ளது. 

கோவையில் நேற்றும் இன்றும் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கோவையில் இன்று செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தார்.

கட்சியின் மத்தியக் குழுவின் வழிகாட்டுதலின்படி இடதுசாரிகள், ஜனநாயக சக்திகளுடன் இணைந்து பயணிப்போம் என அவர் கூறவும், செய்தியாளர் ஒருவர், தி.மு.க. கூட்டணியில் இருக்கிறீர்களா, இல்லையா எனச் சொல்லுங்கள் எனக் கேட்க,

பதிலுக்கு வீரபாண்டியனும், ”எங்கள் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் எனக் கேட்கிறீர்கள்; காங்கிரஸ், வி.சி.க., முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தி.மு.க. அணியில் இல்லை; இந்தச் சூழலில் ஒரு தேர்தல் அணிச்சேர்க்கையில் நாங்கள் இடம்பெற இயலாது.” என்று கூறினார்.

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்றும் அவர் கூறியது பல்வேறு தரப்பினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

முன்னதாக, இன்னொரு இடதுசாரி கட்சியான மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, தி.மு.க. கூட்டணியில் இல்லை என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.