நீதிமன்றம் உத்தரவு 
தமிழ் நாடு

தேவையில்லாமல் நீதிமன்றம் கமெண்ட்- கம்யூ. எம்.பி. எதிர்ப்பு!

Staff Writer

’நீதிமன்றத்தில் ஆஜராகமாட்டேன் என்று கூறுவதற்கு, நிதியமைச்சர் மரிய வில்சன் என்ன இங்கிலாந்து அரசரா?’ என்று சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் கருத்து கூறியிருந்தது, பரவலான கவனத்தை ஈர்த்தது.

அதைத் தொடர்ந்து, வழக்கறிஞர்கள் மத்தியில் இதற்கு அதிருப்தியும் எதிர்ப்பும் எழுந்தது.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

“ ஜனநாயக அரசியல் அமைப்பில் அரசருக்கு ஏது இடம்?

நீதிமன்றங்கள், தங்கள் முன்வரும் வழக்குகளில், சட்ட வரம்பின் எல்லைமீறல்கள் இருக்கிறதா என்று ஆராய்வதும், அதற்குத் தக்கபடி தீர்ப்பளிப்பதும்தான் அவர்களது கடமையாகும்!

இந்த வழக்கில் மரியவில்சன் வர மறுத்தால், அது சட்டப்படி குற்றம் ஆஜராகித் தான் தீரவேண்டும் என்று அறிவித்துவிட வேண்டியதுதானே!

அதைவிடுத்து எதற்கு இத்தகைய காமன்ட் கள்?

இப்படி ஒரு கமென்ட்அடித்துத்தானே CJP என்ற கட்சியை உச்ச நீதிமன்றம் தொடக்கியது!

சட்ட எல்லை தாண்டிய காமன்ட்களை நீதிமன்றங்கள் தவிர்க்க வேண்டும்!

அது, மனித மனங்களில் காயத்தைத் தோற்றுவிக்கும்!” என்று சுப்பராயன் கூறியுள்ளார்.