விஜய் அமைச்சரவையில் இருந்துகொண்டே ஆட்சியைக் குறைசொல்கிறார்கள் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திடீர்க் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதனால் விஜய் தலைமையிலான த.வெ.க. கூட்டணிக்குள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிரடிக்குப் பெயர்போன வைகோ, இப்போது த.வெ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிலையில், சக கூட்டணிக் கட்சிகளே ஆட்சியைக் குறைசொல்வதாகவும் குறிப்பாக அமைச்சரவையில் இருந்துகொண்டே முதலமைச்சர் விஜய் மீது தாக்குதல் தொடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தாங்களும் முசுலிம் லீகும் மட்டுமே கூட்டணி அரசை விமர்சிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
வைகோ கூறியது வி.சி.க.வைத்தான் எனப் பல தரப்பினரும் கருதும்நிலையில், அந்தத் தரப்பு அமைதிகாக்கிறது.
இந்த நிலையில், கூட்டணியில் இருக்கும் இரண்டு தலைவர்களுக்கு முதலமைச்சரைத் தாக்காமல் காலை சாப்பாடு இறங்காது என்று அவர் கூறியதற்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ் பதில் அளித்துள்ளார்.
வைகோவின் பேச்சைப் பகிர்ந்து, "எங்களைத் தான் சொல்கிறீர்கள் என்பது எங்களுக்கு புரிகிறது!ஆனால் நீங்கள் சொல்வதின் பொருள் உங்களுக்கு புரிந்தால் சரி!" என்று சாமுவேல் ராஜ் தன் முகநூல் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.