தமிழ் நாடு

ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் ஆளுநர்- தேர்தல் ஆணையத்திடம் சி.பி.எம். புகார்

Staff Writer

அரசியல் சாசனத்திற்கு விரோதமாக ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களில் தமிழக ஆளுநர் பங்கேற்கும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க அகில இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு சி.பி.ஐ.(எம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடிதம் அனுப்பியுள்ளார். 

அரசியல் சாசனத்திற்கு விரோதமாக ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், தமிழ்நாட்டில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்திட வேண்டுமெனவும் அவர் அதில் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இக்கடிதத்தின் நகலை கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ. ஆறுமுக நயினார் மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை நேரில் சந்தித்து அளித்துள்ளார்.