சிபிஐஎம் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர்  
தமிழ் நாடு

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கட்சித் தலைவர்!

Staff Writer

அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற முன்னாள், இந்நாள் உறுப்பினர்களில் உடல்நலம் குன்றினால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்வது வழக்கம்.

இதில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் போன்றவர்கள் விதிவிலக்குகளாக உள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் உடல்நலம் குன்றியதால் சென்னை அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

அரசியல் கட்சிகளின் தலைவர்களில் சுதந்திரப் போராட்டத் தியாகி நல்லகண்ணு போன்ற தலைவர்களும் பெரும்பாலும் அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்கின்றனர். இதேபோல, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகமும் சில நாள்களாக உடல்நலம் குன்றிய நிலையில், இன்று காய்ச்சல் உறுதியானது. 

சிகிச்சைக்காக, சென்னை, இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ”மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். ஓரிரு நாட்களில் நலம்பெற்று வீடுதிரும்புவார்.” என்று அக்கட்சியின் மாநில அலுவலக செயலாளர் வெ. ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.