அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு 60% உள்ள அகவிலைப்படியை வரும் நவம்பர் மாதம் முதல் 63% உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
இதுகுறித்த தமிழக அரசின் இன்றைய செய்திக்குறிப்பு:
"தமிழக மக்கள் நலனை முன்னிறுத்தி பல்வேறு நலத்திட்டங்களை வடிவமைப்பதிலும், அவற்றைத் திறம்பட நடைமுறைப்படுத்துவதிலும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் முக்கியப் பங்கினை வகித்து வருகின்றனர்.
அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து, ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு வரும் நவம்பர் மாதம் முதல் அகவிலைப்படி 60% முதல் 63% வரை உயர்த்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மாநில அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில், மாநில அரசுப் பணியாளர்களுக்கும் வரும் நவம்பர் மாதம் முதல் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது." என்று கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் 16 இலட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயனடைவர். மேலும், இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 1,858 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.