மனிதவள மேலாண்மைத் துறையின் அமைச்சர் த. சரத்குமார்  
தமிழ் நாடு

அரசுப் பெண் பணியாளர்களின் 3-வது குழந்தைக்கான மகப்பேறு விடுப்பு 365 நாள்களாக உயர்வு!

Staff Writer

சட்டப்பேரவையில் இன்று துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மனிதவள மேலாண்மைத் துறையின் அறிவிப்புகளை துறை அமைச்சர் த. சரத்குமார் அறிவித்தார்.

மனிதவள மேலாண்மைத் துறை அறிவிப்புகள்:

1) அரசுப் பெண் பணியாளர்களின் மூன்றாவது குழந்தைக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 12 வார மகப்பேறு விடுப்பு 365 நாள்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

2) போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் ரூ. 2 கோடியில் புனரமைக்கப்படும்.

3) பொதுமக்கள், வணிகர்கள் எளிதில் சான்றிதழ்கள், உரிமங்கள் உட்பட்ட 150 அரசு சேவைகளை இணையவழியில் எளிமையாகப் பெற எளிமை ஆளுமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

4) பல்வேறு அரசுத் துறைகளில் நீண்ட நாள்களாகக் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து கண்டறிந்து, டி.என்.பி.எஸ்.சி. மூலம் வெளிப்படையான முறையில் உடனுக்குடன் நிரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

5) அரசு அலுவலகங்களில் பணியாளர்களின் வருகையை முறைப்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை மேலும் விரிவுபடுத்தப்படும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram