அரசியலில் தனுஷ் 
தமிழ் நாடு

'தமிழக எழுச்சிக் கழகம்' - நடிகர் தனுஷ் புது அரசியல் கட்சி!

Staff Writer

தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சியின் பெயரை நடிகர் தனுஷ் பதிவுசெய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய இரண்டு ஆண்டுகளில், நடப்பு ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று தற்போது முதல்வராக உள்ளார்.

இவரைத் தொடர்ந்து, முன்னணி நடிகர்களான தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரும் அரசியலுக்கு வரவிருப்பதாக பேச்சு அடிபட்டு வந்தது.

இந்த நிலையில், முன்னணி நடிகராக திரைப்படங்களில் வலம்வரும் தனுஷ், தனது ரசிகர் நற்பணி மன்றத்தையும் வலுப்படுத்தி வந்தார். இது தனுஷ் மீது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அண்மையில், தனது ரசிகர் மன்றத்தை மாவட்டரீதியாகப் பிரித்து, மாவட்டத் தலைவர்களை நியமித்தார். அதேபோல, தொகுதிரீதியாகவும் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, தனுஷ் சார்பில் 'தமிழக எழுச்சிக் கழகம்' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷின் அரசியல் நிலைபாடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், அவரின் கட்சிக் கொடி, கொள்கைகள், கோட்பாடுகள் ஆகியவையும் விரைவில் பொதுவெளியில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram