சௌமியா அன்புமணி, தலைவர், பசுமைத் தாயகம் 
தமிழ் நாடு

தருமபுரி- சௌமியா அன்புமணி; பெரம்பூர்- திலகபாமா... பாமக 2ஆம் கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு!

Staff Writer

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அன்புமணி பாமகவின் 2ஆவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் அன்புமணி பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக ஏற்கனவே 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அன்புமணி ராமதாஸ் அறிவித்திருந்தார். கீழ்வேளூர்- வடிவேல் ராவணன்; அம்பத்தூர்- கே.என்.சேகர்; செஞ்சி- கணேஷ் குமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார்.

பாமக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்:

1. பெரம்பூர் – கவிஞர் ம.திலகபாமா

2. தருமபுரி – முனைவர் சௌமியா அன்புமணி

3. விருத்தாசலம் – மருத்துவர் தமிழரசி ஆதிமூலம்

4. சேலம் மேற்கு – மு.கார்த்தி

5. பென்னாகரம் – பாடி வெ. செல்வம்

6. போளூர் – சி.ஆர். பாஸ்கரன்

7. திருப்போரூர் – வழக்கறிஞர் கே.பாலு

8. ஜெயங்கொண்டம் – க. வைத்தி

9. சேலம் வடக்கு – எஸ். சதாசிவம்

10. விக்கிரவாண்டி – சி. சிவக்குமார்

11. சோளிங்கர் – வழக்கறிஞர் க. சரவணன்

12. மயிலாடுதுறை – சித்தமல்லி ஏ.பழனிச்சாமி

13. உத்திரமேரூர் – பெ. மகேஷ்குமார்

14. ரிஷிவந்தியம் – அ.ப. செழியன்

15. காட்டுமன்னார்கோயில் (தனி) – மருத்துவர் அன்பு சோழன்.