போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வுக்காக மாநிலம் முழுவதும் இன்று நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சென்னையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
சென்னை, தாம்பரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சருமான சரத்குமாரும் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வில் பங்கேற்றார்.
இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் பார்வையாளராக அவர் பங்கேற்றபோது போதைப் பொருளைப் பயன்படுத்தியதாக சமூக ஊடகங்களில் காணொலி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரச்னை பெரிதான நிலையில், அவர் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். குழந்தைக்கான மருந்தை உடைத்து பொடியாக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இதை ஏற்காத தி.மு.க., பிற கட்சிகளின் ஆதரவாளர்கள் அமைச்சர் பொய் சொல்வதாக வசைமாறி பொழிந்துவருகின்றனர்.