நடிகர் விஜய்யின் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான விவகாரத்தில் நீதிபதியை விமர்சித்ததாக தமிழக வெற்றிக் கழகத்தின் திண்டுக்கல் (தெற்கு) மாவட்டச் செயலாளர் எஸ்.எம். நிர்மல்குமாரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் அவதூறாக, உண்மைக்குப் புறம்பாக பதிவிடுபவர்கள் மீது காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பத்திரிகையாளர்கள், தவெக உள்ளிட்ட கட்சியினர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே, கரூர் சம்பவத்தில் நீதிபதியை விமர்சித்ததாக தவெகவின் திண்டுக்கல் (தெற்கு) மாவட்டச் செயலாளர் நிர்மல்குமாரை சாணார்பட்டி போலீசார் இன்று (அக்டோபர் 12) கைது செய்தனர்.
சாணார்பட்டி காவல்நிலையத்தில் நிர்மல்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
தவெக மா.செ. நிர்மல்குமார் கைதுக்கு அதிமுகவினர் சமூக ஊடகங்களில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.