தமிழ் நாடு

‘முதல்வன்’ படத்தை நினைவூட்டி முதல்வர் விஜய்க்கு வாழ்த்து சொன்ன இயக்குநர் ஷங்கர் !

Staff Writer

இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று கூறியதையெல்லாம் தகர்த்தெறிந்து… என்று தனது ‘முதல்வன்’ படக் கதையை நினைவூட்டி இயக்குநர் ஷங்கர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கும் பதிவு சர்ச்சையாகியிருக்கிறது.

1999ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடித்து மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘முதல்வன்’. இப்படம் ’96 காலத்து முன்னாள் முதல்வர் கருணாநிதியை ஆட்சியை கடுமையாக விமர்சித்து எடுக்கப்பட்டது என்று எதிர்ப்புகள் கிளம்பி படத்துக்கு எதிராக திமுகவினர் தரைமட்டத்தில் இறங்கி களமாடினார்கள். தமிழகமெங்கும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. உச்சபட்சமாக, அப்போதைய தென்னக திமுக அதிபர் மு.க அழகிரி தியேட்டர்களில் படம் தோல்வி அடையவேண்டும் என்பதற்காக முதல்வன் இலவச டிவிடி விநியோகங்களே செய்தார்.

அச்சம்பவங்களை நினைவூட்டும் வகையில்தான் இன்று ஷங்கரின் பதிவு அமைந்துள்ளது. அப்பதிவில், … இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று கூறியதையெல்லாம் தகர்த்தெறிந்து லட்சியமும் செயலும் ஒன்று சேர்ந்தால் எதுவும் சாத்தியம் என்று நிரூபித்துள்ளீர்கள். மாண்புமிகு முதலமைச்சர் திரு @CMOTamilnadu @TVKVijayHQ அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். என்று ஷங்கர் கூறியுள்ளார்.

இப்பதிவுக்குக் கீழே முதல்வருக்கு முதல்வனின் வாழ்த்துகள் என்று ஷங்கருக்கு ஆதரவாகவும், ‘’’இவ்வளவு நாளா எங்கே இருந்தீங்க’ என்று எதிர்ப்புமாக பின்னூட்டங்கள் குவிந்துகொண்டிருக்கின்றன.

இப்படத்தின் கதையை ஷங்கர் முதலில் சொன்னது கமலுக்குத்தான். தான் அடுத்த ஒரு வருடத்துக்கு பிசியாக இருப்பதால் கமல் காத்திருக்கச் சொல்ல உடனே கதையை அடுத்து விஜய்க்கு ஷங்கர் சொல்ல, திமுகவினர் எதிர்ப்பை சமாளிக்க முடியுமா என்று யோசித்த விஜய் ஷங்கருக்கு நோ சொன்னபிறகே அப்படத்தில் அர்ஜூன் நடித்தார் என்பது சுவாரசியமான ஃப்ளாஷ்பேக்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram