நடிகர் சத்யராஜின் மகளும் தி.மு.க. ஐ.டி. அணியின் நிர்வாகியுமான திவ்யா மீது நேற்று பிரச்சாரத்தின்போது செருப்பு வீசப்பட்டுள்ளது. விஜய்யின் த.வெ.க. கட்சியினரே இதில் ஈடுபட்டதாக திவ்யா குற்றஞ்சாட்டியுள்ளார்.
அறிக்கை ஒன்றைதன் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்டுள்ள திவ்யா, இதற்காக த.வெ.க. தலைவர் தன் தொண்டர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒரு கருத்தை வைத்துக்கொள்வதற்காக யாரும் தாக்கப்படக் கூடாது; அதுவும் பெண்கள் கருத்து வைத்துக்கொண்டதற்காக செருப்பால் தாக்கப்படக் கூடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விஜய்யின் மனைவி சங்கீதாவைக் குறிப்பிட்டு, இணையத்தில் வசை பாடப்பட்டதைப் பூடகமாக உணர்த்தி, அவரும் மதிக்கப்பட வேண்டும் என்றும் திவ்யா சத்யராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.