கொட்டும் மழையில் தாராபுரம் இடைத்தேர்தலில் சுகன்யா பிரச்சாரம் 
தமிழ் நாடு

விலைபோக மாட்டேன் - தாராபுரத்தில் கொட்டும் மழையில் சுகன்யா பிரச்சாரம்!

Staff Writer

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளும் அடுத்த மாதம் 6ஆம்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான மனுத்தாக்கல் தொடங்கியுள்ளது. 

தி.மு.க.வின் சார்பில் பரந்தாமன் மதுராந்தகத்தில் இன்று காலையில் மனு தாக்கல் செய்தார். முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் உட்பட்டதி.மு.க. முன்னணியினர் உடனிருந்தனர். 

தாராபுரம் தொகுதியில் சுகன்யா வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். 

கொட்டும் மழையில் சுகன்யா பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வைப் பெயர் குறிப்பிடாமல், அவரைப் போல, விலைபோக மாட்டேன் என்று குறிப்பிட்டார்.