தி.மு.க. தலைமையகம் அண்ணா அறிவாலயம் 
தமிழ் நாடு

முதல்வர் விஜய் குதிரை பேரம்... ஆளுநரிடம் தி.மு.க. புகார்!

Staff Writer

முதலமைச்சர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபட்டதை வைகோ ஒப்புக்கொண்டதாகவும் இதில் நடவடிக்கை கோரியும் தி.மு.க. சார்பில் அதன் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆளுநர் அர்லேகருக்கு புகார்க் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

”கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சீர்காழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் செல்வன் ஆகிய இருவரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசுக்குப் பெரும்பான்மை இல்லாததால், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் இருவரையும் பதவி விலகச் செய்ய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோவுடன் இணைந்து முதலமைச்சர் விஜய் கூட்டுச் சதியில் ஈடுபட்டதை வைகோவே வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

இத்தகைய குதிரை பேரத்தில் முதலமைச்சரே நேரடியாக ஈடுபட்டுள்ளதால் அவர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு உத்தரவிடவேண்டும்.” என்று பாரதி கூறியுள்ளார்.