மு.க.ஸ்டாலின் - ராகுல்காந்தி
தமிழ் நாடு

திமுக- காங். ஒப்பந்தம் இன்று இரவு கையெழுத்து..?

Staff Writer

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 27 தொகுதிகள், 1 ராஜ்யசபா சீட் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் இன்று இரவு (பிப்ரவரி 22) 8 மணிக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோர் அடங்கிய குழு சந்தித்து தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது என்று ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்திக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.