தி.மு.க. தலைமையகம் அண்ணா அறிவாலயம் 
தமிழ் நாடு

18ஆம் தேதி தி.மு.க. செயற்குழு கூடுகிறது!

Staff Writer

தி.மு.க.வின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் வரும் 18ஆம் தேதி நடைபெறுகிறது. 

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று காலையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 18-12-2024 புதன் காலை 10 மணியளவில் தி.மு.க. தலைமைச் செயற்குழுக் கூட்டம், சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும். அதில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.