வரும் 23ஆம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 23.09.2025 செவ்வாய் கிழமை, காலை 10.00 மணியளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறும்.
அதுபோது, தி.மு.க. மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலயது கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.