கோவையில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் 
தமிழ் நாடு

கோவை மாணவன் கொலை- தி.மு.க.வினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்!

Staff Writer

கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, கோவையில்தி.மு.க. மாணவர் அணி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் அவினாசி சாலையில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் படித்துவந்த மாணவன் அமுதன் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் கேட்டபோது, மாணவர்களுக்கு இடையேயான கோஷ்டி மோதலால் இந்தக் கொலை நடந்துள்ளதாகக் கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தமிழக அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் மாணவன் பயின்ற கல்லூரிக்கு எதிரே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் திமுக மாணவர் அணியின் முக்கிய நிர்வாகிகள், உள்ளூர் திமுக பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

போராட்டக்காரர்கள் வைத்த கோரிக்கைகள்:

1.    மாணவர் அமுதனின் கொலைக்குக் காரணமானவர்களை உடனடியாகக் கைது செய்து கடுமையான தண்டனை வழங்கிட வேண்டும்.

2.    கல்வி நிறுவனங்கள், கல்லூரி மாணவர்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை வேண்டும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram