தமிழ் நாடு

தி.மு.க. கூட்டணியில் 5ஆவது உடன்பாடு- கொ.ம.தே.க.வுக்கு 2 தொகுதிகள்!

Staff Writer

தி.மு.க. கூட்டணியில் தொகுதிப்பங்கீடு தொடர்பாக ஐந்தாவது உடன்பாடு இன்று கையெழுத்தானது. 

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அக்கட்சியின் வேட்பாளர்கள் தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் இதே கூட்டணியில் கொ.ம.தே.க.வுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. திருச்செங்கோடு, பெருந்துறை, சூலூர் ஆகிய தொகுதிகளில் கொ.ம.தே.க. போட்டியிட்ட நிலையில், திருச்செங்கோட்டில் போட்டியிட்ட கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் மட்டும் வெற்றிபெற்றார்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/kmdk-forms-committee-for-seat-sharing-talks-with-dmk-775791.html