பெரியார் அறிவுலகம் 
தமிழ் நாடு

தி.மு.க.வும் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் மனு... நூல் ஊழல்!

Staff Writer

கோவை ‘பெரியார் அறிவுலகத்தில்’ புத்தக கொள்முதல் நடைபெற்றதில் ஊழல் குறித்து விசாரிக்க தி.மு.க. சார்பில் அதன் சட்டத்துறை இணைச் செயலாளர் ஐ.பரந்தாமன் ஊழல் தடுப்புத் துறை இயக்குநருக்கு புகார் மனு அனுப்பினார்.

அதன் விவரம்:

” கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தக கொள்முதல் நடைபெற்றதில் ஊழல் குறித்து விசாரிக்க தி.மு.க. சார்பில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரிடம் இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பின்வரும் கேள்விகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

1. இந்தப் புத்தகங்களுக்கான கொள்முதல் / வாங்குதல் ஆர்டர்களை (procurement / purchase orders) வழங்கிய அதிகாரிகள் யார்?

2. புத்தகங்கள் ஒவ்வொன்றாக மதிப்பீடு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு வாங்கப்பட்டனவா அல்லது மொத்தமாக (in bulk batches) வாங்கப்பட்டனவா?

3. இந்தப் பதிப்பகங்களுக்குக் கொள்முதல் ஆர்டர்கள் எந்த தேதிகளில் வழங்கப்பட்டன?

4. கொள்முதலுக்கான குறிப்புக் கோப்பை (note file) தொடங்கிய, கையெழுத்திட்ட, ஒப்புதல் அளித்த அதிகாரிகள் யார்?

5. இந்தக் கொள்முதலுக்குத் தகுதிவாய்ந்த புத்தகத் தேர்வு / கொள்முதல் குழு (Book Selection / Purchase Committee) ஒப்புதல் அளித்ததா, மேலும் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறை பின்பற்றப்பட்டதா?

6. திரிஷா விஜய், சங்கீதா விஜய், தாமரை பன்னீர், தாமரை முரளி, மோனிகா ரவி ஆர். பிற பெயர்களைக் கொண்ட எழுத்தாளர்கள் உண்மையில் இருக்கிறார்களா?

7. புத்தகங்கள் எந்த தேதிகளில் விநியோகிக்கப்பட்டன, அவை பெறப்பட்டவுடன் அவற்றின் தரமும் அளவும் சரிபார்க்கப்பட்டனவா?

8. ஒவ்வொரு பதிப்பகத்திற்கும் எந்தத் தேதிகளில், எவ்வளவு தொகை வழங்கப்பட்டது?” என்று தி.மு.க. தலைமைக்கழகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.