சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான முதலமைச்சர் விஜய் பதிலுரை இன்று இடம்பெற்றது. அப்போது தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிய்நடப்பு செய்தனர்.
முதலமைச்சர் அவையில் கூறியபடி கட்சி நிதி பெயரில் கொள்ளை என்பதற்கு ஆதாரம் இருந்தால் காட்டவேண்டும் என முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.
முதலமைச்சர் குட்டிக் கதை சொல்கிறார்; உங்கள் அப்பாவிடம் நீங்கள் எப்படி நடந்துகொண்டீர்கள்? உங்கள் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் ஊடகங்களில் பேட்டி அளித்திருக்கிறார்; உதயநிதி கூறியதைப்போல செங்கல்பட்டில் கணவனைக் காணவில்லை என மனைவி வழக்கு தொடுத்திருக்கிறார்; அப்பாவைக் காணோம் என மனைவியும் மகளும் தவித்திருக்கிறார்கள்; இப்படி நாங்களும் பல குட்டிக்கதைகள் சொல்வோம் என்றும் சிவசங்கர் கூறினார்.
முதலமைச்சர் ஒரு சைகை காட்டியிருக்கிறார்; சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு செய்ததுதானே இது? அவருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? அதே லெவல்தானா நீங்கள் என்றும் விஜய்க்கு சிவசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டம், ஒழுங்கு குறிப்பாக பாலியல் வன்முறைகளில் த.வெ.க.வினரைப் பற்றிய விவகாரங்களில் முதலமைச்சர் வாய்திறந்து பேசுவதில்லை என்றும் சிவசங்கர் சாடினார்.