இடதுசாரி கட்சிகளின் மாணவர் அமைப்புகளைப் போல, கல்லூரி சேரும் மாணவர்களுக்கான உதவி ஏற்பாட்டை தி.மு.க. சார்பிலும் செய்யவுள்ளனர்.
அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள தலைமைக்கழக அலுவலகத்தில், தி.மு.க. மாணவர் அணியின் சார்பில் உருவாக்கப்பட்ட டிஎஸ்சி உதவி மையத்தைத் தொடங்கிவைத்தார். 2026-2027ஆம் ஆண்டு கல்லூரிகளில் முதலாமாண்டு சேரவிருக்கும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில், இது செயல்படும்.
அப்போது கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்கள் ஆ.இராசா, மு.பெ.சாமிநாதன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா - மாணவர் அணிச் செயலாளர் வீரமணி, துணைச் செயலாளர்கள் மன்னை த.சோழராஜன், வி.ஜி.கோகுல் உட்பட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.