தமிழ் நாடு

காயில் மில்லத் நினைவிடத்தில் காங்கிரஸ்- தி.மு.க.வினர் மோதல்!

Staff Writer

சென்னை அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை உட்பட பல அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இன்று மலர்ப் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வருகைக்காக அவரின் கட்சியினர் முன்னரே வந்து காத்திருந்தனர். அந்த நேரத்தில் செல்வபெருந்தகை தன் ஆதரவாளர்களுடன் அங்கு வந்தார்.

உடனே தி.மு.க.வினர் அவர்களைப் பார்த்து ’துரோகிகள்’ எனக் கூச்சலிட்டபடி பிரச்னை செய்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் கட்சியினர் சுதாரித்துக்கொண்டு பதிலுக்கு சத்தம்போட, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நிலை ஏற்பட்டது.

வாய்த் தகராறு சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. இதனால் அங்கு பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.

அங்கிருந்த பெரியவர்களும் காவல்துறையினரும் தலையிட்டு இரு தரப்பினரையும் விலக்கி சமாதானப்படுத்தினர்.

பொதுவாழ்வில் இலக்கணமாக வாழ்ந்து மறைந்த ஒரு தலைவரின் நினைவிடத்தில் இரு கட்சியினரும் இப்படி மோதிக்கொண்டது அருவருப்பை ஏற்படுத்தியது.