தி.மு.க. ஐடி விங் ஆலோசனையில் ஜெயரஞ்சன் 
தமிழ் நாடு

தி.மு.க. ஐடி விங் ஆலோசனையில் ஜெயரஞ்சன்!

Staff Writer

தேர்தல் தோல்விக்குப் பிறகு தி.மு.க.வில் அமைப்புரீதியாக மாற்றம் செய்ய பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக, கட்சியமைப்பு 110 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.

தி.மு.க. ஐடி விங் ஆலோசனை

அத்துடன் அவற்றுக்கான தேர்தலை நடத்தவும் நேற்று பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். வருவாய் மாவட்டத்துக்கு தலா இருவர் என தலைமைக் கழகப் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் அவர்கள் அந்தந்த மாவட்டங்களில் தேர்தலை நடத்தவுள்ளனர். 

இந்த நிலையில், தி.மு.க.வின் ஐடி விங் ஆலோசனைக் கூட்டம், சென்னை அன்பகம் வளாகத்தில் நடைபெற்றது. அணியின் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திட்டக்குழு முன்னாள் துணைத்தலைவர் ஜெயரஞ்சனும் கலந்துகொண்டார். 

முன்னதாக, அவர் இந்த அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.