திருச்சி மருத்துவமனையில் மூதாட்டி 
தமிழ் நாடு

மூதாட்டியை எலி கடித்த கோரம்: திருச்சி மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்!

Staff Writer

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டியின் கால் கட்டை விரலை எலி கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் பொன்மலை அருகே உள்ள ஆலந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்க்கொடி. இவருக்கு வயது 60. கடந்த ஜூலை 10ஆம் தேதி, எலும்பு மூட்டு அறுவை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், இவரின் கால் கட்டை விரலை எலி ஒன்று இன்று அதிகாலை 5 மணிக்கு கடித்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த மருத்துவர்கள், உடனடியாக மூதாட்டியைப் பரிசோதித்து தடுப்பூசி செலுத்தினர்.

இந்த சம்பவத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் முழுப் பொறுப்பேற்று, விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூதாட்டியின் மகன் விஜயகுமார் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட விளக்கத்தில், "இன்று அதிகாலை மூதாட்டியின் கால் கட்டைவிரலை எலி கடித்ததில், ஆழமான காயமோ, ரத்தப்போக்கோ இல்லை. அவருடைய கால் கட்டைவிரலின் தோளில் சிறிய சிராய்ப்பு மட்டுமே ஏற்பட்டது. அதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ரேபிஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. அவரின் உடல்நிலை சீராக உள்ளது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram