அண்ணா பல்கலைக்கழகம் 
தமிழ் நாடு

ஜூலை 1இல் பி.இ., பி.டெக். தர வரிசைப் பட்டியல்!

Staff Writer

தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேர்க்கை – 2026 தரவரிசைப் பட்டியல் 01.07.2026 அன்று வெளியிடப்படும்
என்று உயர்கல்வித் துறை அமைச்சர்
பெ. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம்:

”சிபிஎஸ்இ மறுமதிப்பீட்டு மதிப்பெண்கள் 21.06.2026 அன்று வெளிவந்த நிலையில் 29.06.2026-யில் வெளியிட இருந்த தரவரிசைப் பட்டியல் 01.07.2026 அன்று வெளியிடப்படும்.

மேலும், பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு (Counselling) தேதிகளும் அன்று அறிவிக்கப்படும். வெளியிடப்படும் தரவரிசைப் பட்டியலில் ஏதேனும் குறைகள் இருப்பின், அவற்றைச் சரிசெய்வதற்கான குறைதீர்ப்பு (Grievance Redressal) காலம் 01.07.2026 முதல் 05.07.2026 வரை வழங்கப்படும்.

இந்தக் காலகட்டத்தில் மாணாக்கர்கள் தங்களுக்குரிய குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள, அருகிலுள்ள தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேர்க்கை சேவை மையங்களை (TFCs) நேரில் அணுகலாம்.” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.