எடப்பாடி பழனிசாமி 
தமிழ் நாடு

இடைத்தேர்தலில் பணபலம், அதிகாரபலம் வைத்துதான் த.வெ.க. வெற்றி - எடப்பாடி பழனிசாமி

Staff Writer

தமிழகத்தில் த.வெ.க. அரசு செயற்கை மின்தடையை ஏற்படுத்துவதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

ஓமலூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் கூறியதாவது:

"தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திரா, ரூ.20-க்கு மின்சாரம் வாங்கும்போது, த.வெ.க. அரசு மட்டும் இவ்வளவு விலை கொடுத்து வாங்கத் தயாராக உள்ளது. அனைவரிடத்திலும் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மின்சாரம் டெண்டர் குறித்து தேர்தலுக்கு முந்தைய பரப்புரையில், அவதூறாகப் பேசிய த.வெ.க.வும் அதைத்தான் செய்கிறது.

அடுத்ததாக, இன்று அத்தியாவசியப் பொருட்களின் விலை உச்சத்தை எட்டியுள்ளது. இதனால், சிறு, நடுத்தர மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்தப் பிரச்னைக்காக, த.வெ.க. அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில், பணபலம், அதிகாரபலத்தையும் வைத்துதான் த.வெ.க. வெற்றி பெற்றுள்ளது.

தீயசக்தி என்று த.வெ.க. தலைவர் விஜய் குறிப்பிடும் தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில்தான் ஆட்சியை நடத்துகிறது." என்று கூறினார்.

மேலும், த.வெ.க. ஆட்சி குறித்த ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram