எடப்பாடி பழனிசாமி 
தமிழ் நாடு

எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?- எடப்பாடி பழனிசாமி

Staff Writer

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, முட்புதரில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 

” தமிழகத்தில் எங்கே இருக்கிறது பெண்கள் பாதுகாப்பு? என்னதான் செய்கிறது காவல்துறை? எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?

இதுபோன்று இன்னும் எத்தனை பெண்கள், சிறுமிகள் உங்களுடைய 6 மாத சோதனைக் காலம் முடியும் வரை பாதுகாப்பை இழந்து, உயிரை இழக்க வேண்டும்?

“அதிகாரிகளை நியமித்துவிட்டேன். இனிமே எல்லாம் மாறிவிடும்” என்று டயலாக் பேசிய முதல்வரே… இதுதான் அந்த மாற்றமா?

குழந்தை பாலியல் வன்கொடுமை- கொலை வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனியாவது வித்தை காட்டும் அரசியலை நிறுத்திவிட்டு, தீவிரத்தைப் புரிந்து சட்டம் ஒழுங்கைக் காக்கும் செயல்களில் ஈடுபடவேண்டும்.” என்று பழனிசாமியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram