எடப்பாடி பழனிசாமி - விஜய் 
தமிழ் நாடு

நார்ச்சிச குணத்தை நிரூபித்த விஜய் அரசு- கடுமையாகத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி

Staff Writer

நாம் தமிழர் கட்சியின் சார்பில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் திருமதி. கார்த்திகா அவர்களை இன்றைய தவெக அரசு அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தேர்தல் நேரத்தில் போடப்படும் வழக்குகளை எல்லாம் காட்டி, தங்களின் வன்மத்தை தீர்த்துக் கொள்ள இன்றைய வன்ம குடோன் ஆட்சியாளர்கள் இப்படிப்பட்ட பாசிசப் போக்கை கையாள்வது வெட்கக்கேடானது.

ஒரு அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரைக் கைதுசெய்ததன் மூலம், நாங்கள் எப்போதும் இவர்களைப் பார்த்து சொல்லக் கூடிய நார்ச்சிச குணம்- அதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து உள்ளது திரு. ஜோசப் விஜய் தலைமையிலான ஆச்சரியக்குறி அரசு.

“ஒருவேளை உங்கள் கான்வாய் செல்லும்போது மக்கள் யாராவது மனு கொடுக்க வந்தால், வண்டியை நிறுத்தி மனுவை வாங்குவீர்களா? அல்லது, உங்கள் கான்வாய்-க்கு குறுக்கே வந்தார்கள் என்று வழக்குப் பதிந்து கைதுசெய்வீர்களா?” என்ற சந்தேகம் இப்படிப்பட்ட கைதுகளால் தமிழக மக்களுக்கு எழுந்துள்ளது.

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த திருமதி. கார்த்திகா உட்பட்ட அக்கட்சியினர் மீதான கைது நடவடிக்கையினை கைவிட வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறோம்.” என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.