எடப்பாடி பழனிசாமி 
தமிழ் நாடு

பிப்.21 முதல் எடப்பாடி பழனிசாமி அடுத்தகட்டப் பிரச்சாரம்!

Staff Writer

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே இரண்டு சுற்றுகள் தேர்தல் பிரச்சாரத்தை முடித்திருந்தார். இந்நிலையில் அடுத்தகட்டமாக வரும் 21ஆம் தேதி முதல் அவர் மீண்டும் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி, அம்பத்தூர் தொகுதிகளுக்கும் சேர்த்து அன்று மாலை 5 மணியளவில் அம்பத்தூரில் பிரச்சாரம் மேற்கொள்ளும் அவர், மறுநாள் ஞாயிறன்று மாதவரம் தொகுதியில் மாலை 4 மணிக்கும், பொன்னேரி தொகுதியில் மாலை 5 மணிக்கும் பிரச்சாரம் செய்கிறார்.

அதற்கடுத்து, 25ஆம் தேதியன்று புதன்கிழமை மதுரவாயல், பூந்தமல்லி ஆகிய தொகுதிகளுக்கும் சேர்த்து, வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகிறார்.

பிப்.26ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தொகுதிகளுக்கு சேர்ந்தபடியாக, மாலை 4.30 மணியளவில் பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

இத்தகவலை அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ளது.