தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், “தேர்தல் ஆணையம் நாளைக்கே தேர்தல் வைத்தாலும் தவெக வெற்றி பெற்று விஜய் ஆட்சி அமைப்பார்.” என்று கூறியுள்ளார்.
1991-96 ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் அமைச்சராக இருந்த கு.ப. கிருஷ்ணன், அதிமுக பிளவுக்குப் பிறகு ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வந்தார்.
இந்த நிலையில், மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் முன்னிலையில் அவர் இன்று தவெகவில் இணைந்தாா்.
பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெறபோகிறது. விஜய் தலைமையில் நல்லாட்சி நடைபெற போகிறது.
தேர்தல் ஆணையம் நாளைக்கே தேர்தல் வைத்தாலும் தவெக வெற்றி பெற்று விஜய் ஆட்சி அமைப்பார்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவையே மறந்துபோனவர்கள் அவர்களது ஆட்சியை எப்படி கொண்டுவருவார்கள். அவர்கள் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். எல்லா காலங்களிலும் எல்லாரையும் ஏமாற்ற முடியாது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது நிச்சயம். வெற்று பெறுவது விசில் உறுதி என கூறினார்.