முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு  
தமிழ் நாடு

போலீஸ் விசாரணைக்கு வராமல் எ.வ.வேலு எஸ்கேப்!

Staff Writer

இலஞ்ச ஒழிப்பு காவல்துறையின் விசாரணைக்கு வராமல் தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு டிமிக்கி கொடுத்துள்ளார்.

கடந்த தி.மு.க. ஆட்சியில் கரூர் மாவட்டத்தில் சாலை அமைக்கப்பட்டதாக போலியாகக் கணக்குக்காட்டி ஒப்பந்தகாரர்களுக்கு அரசு நிதி 3.23 கோடி ரூபாய் முறைகேடாக வழங்கப்பட்டது என்று அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டியிருந்தது. ஆனால், அப்போது ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க. நடவடிக்கை எடுக்கவில்லை.

புதியதாக விஜய் தலைமையில் த.வெ.க. ஆட்சி அமைந்தபிறகு, வேலு மீது வழக்கு பதியப்பட்டது. அந்த வழக்கில் இன்று விசாரணைக்கு வருமாறு அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.

ஆனால், வேலு விசாரணைக்கு வரவில்லை.

அவரின் சார்பில் வழக்குரைஞர்கள் மட்டுமே முன்னிலையானார்கள்.

காரணம், சிங்கப்பூர் மருத்துவமனையில் இதய சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அது முடிந்தபிறகு விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.