தி.மு.க. முன்னாள் அமைச்சர் இரகுபதி 
தமிழ் நாடு

கரூருக்கு விஜய் போகும்முன் செந்தில்பாலாஜியைக் கைதுசெய்ய முயற்சி!

Staff Writer

கரூருக்கு விஜய் போகும்முன் செந்தில் பாலாஜியைக் கைதுசெய்ய முயற்சி நடப்பதாகதி.மு.க. முன்னாள் அமைச்சர் இரகுபதி கூறியுள்ளார். 

புதுக்கோட்டையில் இன்று முற்பகலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதைக் கூறினார். 

இங்கு குதிரை பேரத்துக்கான அடையாளமே இல்லை; விசாரணையே நடத்தாமல் வழக்கு பதிவு செய்கிறார்கள் என்றும் அவர் குறை கூறினார்.