டாஸ்மாக் மதுக் கடை 
தமிழ் நாடு

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி புது வருமானம்!

Staff Writer

டாஸ்மாக் மூலம் அரசுக்குக் கிடைக்காமல் போன வருமானத்தை ஈர்க்கும்வகையில் விஜய் அரசாங்கம் புதிய உத்தரவைப் பிறப்பித்தது. அதுகுறித்து ஆளுநர் உரையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இதுவரை தடம்மாறிச் சென்ற வருவாயை அரசின் கணக்குக்குக் கொண்டுவரும் பொருட்டு, மதுபான உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் சிறப்புக் கட்டணத்தை இந்த அரசாங்கம் அண்மையில் விதித்துள்ளது. இதன் முலம் அரசின் கருவூலக் கணக்கில் வரவு வராத வருவாய்கள் அனைத்தும் முழுமையாக முறைப்படுத்தப்படும். அவை அரசின் அதிகாரப்பூர்வ கருவூல வருவாயாக நேரடியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அரசுக்கு ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய்வரை வரவு எதிர்பார்க்கப்படுகிறது.” என்று ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, மது ஆலை உரிமையாளர்கள் தரப்பில் ஆளுங்கட்சிகளுக்கு கணக்கில் காட்டப்படாமல் குறிப்பிட்ட தொகை தரப்பட்டதாகவும் அதனால் அரசுக்கு அந்தத் தொகை வராமல் இழப்பு ஏற்பட்டதாகவும் அதையடுத்தே ஆலை உரிமையாளர்களுக்கு சிறப்புக் கட்டணம் என புதியதாக வசூலிக்க உத்தரவிடப்பட்டது.