இடதுசாரி விவசாயிகள் 
தமிழ் நாடு

அக். 21இல் 500 இடங்களில் விவசாயிகள் போராட்டம்!

Staff Writer

தஞ்சாவூரில் இடதுசாரி கட்சிகளின் விவசாயி சங்கங்களின் நிர்வாகிகள் இன்று கூடி ஆலோசனையில் ஈடுபட்டனர்.

பயிர்க்கடன் தள்ளுபடி, டெல்டா விவசாயத்திற்கு காவிரித் தண்ணீர்த் திறப்பு, சாகுபடி பாதிப்பிற்கு நிவாரணம் கோரி அனைத்து விவசாயி சங்கங்கள். விவசாயிகளுக்கும் அழைப்பு விடுப்பது என முடிவெடுக்கப்பட்டது. 

” தேர்தல் வாக்குறுதிபடி விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்;

சாகுபடி நடந்துவரும் தற்போதைய சூழலில் நிபந்தனையின்றி புதிய கடன்களை வழங்க வேண்டும்.

காவிரி நீர் பாசனம் இன்றி குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், மாநிலம் முழுவதும்

எல்நினோ வறட்சி பாதிப்பால் ஏற்பட்டுள்ள

சாகுபடி பாதிப்பிற்கும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணமும், இக்கால கட்டத்தில் வேலை இழந்துள்ள விவசாய தொழிலாளர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்.

டெல்டா மாவட்டங்களில் கடைமடைவரை சாகுபடிக்கு தேவையான காவிரித் தண்ணீரை தொடர்ந்து திறந்துவிடுவதற்கு, உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரித் தண்ணீரைப் பெற்றுத் தந்திட மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.” என்று வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் 500 இடங்களில் மறியல் செய்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.