இலங்கை, தமிழகத்தை தொடர்ந்து பல நாள்களாக ஆட்டம் காட்டிவந்த பெஞ்சல் புயல் ஒருவழியாக கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது என்று சிறிது நேரத்துக்கு முன்னர் வானிலைத் துறை தெரிவித்துள்ளது.
இதே சமயம், சென்னை வட்டாரத்துக்கு விடுக்கப்பட்டிருந்த அதிகன மழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் திரும்பப்பெற்றுக்கொண்டுள்ளது.
இரவு 10 மணிவரை நகரில் மிதமான மழையே பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.
ஆனால், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் அதிகனமழைக்கான வாய்ப்பு உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.